கடல் கடந்து சூட்கேசில் வந்த 10 கிலோ தக்காளி! தாயின் ஆசையை நிறைவேற்றிய மகள்!!

0
27

கடல் கடந்து சூட்கேசில் வந்த 10 கிலோ தக்காளி! தாயின் ஆசையை நிறைவேற்றிய மகள்!!

 

தாயின் ஆசையை நிறைவேற்ற மகள் ஒருவர் 10 கிலோ தக்காளியை துபாயில் இருந்து சூட்கேசில் வைத்து அனுப்பிய நிகழ்வு இணையத்தில் பாராட்டுகள் பெற்று வருகின்றது.

 

நாடு முழுவதும் பல மாநிலங்களில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு கிலோ தக்காளியானது 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 

தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையிலும், டெல்லியில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பல மாநிலங்களில் 200 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 

இந்நிலையில் தக்காளியை வைத்து தற்போது சில வாரங்களாக பல வித்தியாசமான சம்பவங்கள் நடந்து வருகின்றது. தக்காளிகள் திருடு போதல், தக்காளிக்கு இன்ஷூரன்ஸ் எடுத்தல், தக்காளிகள் திருடு போவதை தடுக்க பவுன்ஸ்சர்ஸ் நியமித்தல் போன்று பல சம்பவங்கள் நடந்து வருகின்றது. அந்த வரிசையில் மற்றொரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.

 

துபாய் நாட்டிலிருந்து கோடை விடுமுறைக்காக இந்தியா வர நினைத்த பெண் ஒருவர் தனது தாயிடம் என்ன வாங்கி வரவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த தாயும் அந்த பெண்ணிடம் 10 கிலோ தக்காளி மட்டும் வாங்கிக் கொண்டு வா என்று கேட்டுள்ளார். தாயின் ஆசையை நிறைவேற்ற அந்த மகளும் துபாயில் இருந்து 10 கிலோ தக்காளியை சூட்கேசில் வைத்து துபாயில் இருந்து இந்தியாவில் இருக்கும் தனது தாய்க்கு அனுப்பி வைத்துள்ளார்.

 

இது குறித்து தக்காளி அனுப்பியவரின் சகோதரி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த பதிவானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த சகோதரி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “என்னுடயை சகோதரி குழந்தைகளின் கோடை விடுமுறைக்காக துபாயில் இருந்து இந்தியா செல்ல நினைத்தாள். அதற்கு முன்பு அம்மாவிடம் ‘உங்களுக்கு துபாயில் இருந்து எதாவது வாங்கி வரவேண்டுமா’ என கேட்டாள். அதற்கு அம்மா ‘எனக்கு 10 கிலோ தக்காளி மட்டும் வாங்கி வா’ என்று கேட்டார். அதன்படி தற்போது எனது சகோதரி அம்மாவிற்கு 10 கிலோ தக்காளியை சூட்கேசில் வைத்து இந்தியா அனுப்பினாள்” என்று பதிவிட்டுள்ளார்.