Savukku shankar: சவுக்கு எனும் யுடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை நடத்தி வருபவர் சங்கர். மிகவும் நேர்மையான, தைரியம் மிக்க பத்திரிக்கையாளர் இவர். யார் என்ன தவறு செய்திருந்தாலும் அதை அப்படியே சுட்டி காட்டுவார். இதனால் அரசியல்ரீதியாக நிறைய எதிர்ப்புகளை சம்பாதித்தார். குறிப்பாக திமுகவினரும், திமுக ஆதரவாளர்களும் இவரை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஏனெனில், கடந்த சில வருடங்களாகவே இவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில்தான், சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 9.30 மணியளவில் துப்புறவு பணியாளர்கள் உடைகளை அணிந்த 50க்கும் மேற்பட்டோர் நுழைந்தனர். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மலக்கழிவுகளை கொட்டினார்கள். அப்போது சவுக்கு சங்கரின் தாய் மட்டும் வீட்டில் இருந்தார் அவரையும் அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
சுமார் 3 மணி நேரங்கள் அவர்கள் என் வீட்டில் இருந்தும் போலீசர் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை வீட்டிற்கு போக வேண்டாம் என சொல்கிறார்கள். அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களும் அந்த கும்பல் தாக்கியிருக்கிறது என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார்.. அவரின் வீட்டில் நடந்த இந்த செயலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சீமான், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதன்பின் ஊடகங்களில் பேசிய சவுக்கு சங்கர் ‘ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகைக்கு தொடர்பு உண்டு. இது திருவேங்டம் என்பவருக்கு தெரியும். அதனால்தான், சென்னை கமிஷனர் வருண் அறிவுரைப்படி திருவேங்கடம் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். இத நான் ஊடகங்களில் சொன்னதால் அவரின் வலியுறுத்தல்படியே என் வீட்டை சூறையாடியதோடு, வீட்டில் மலக்கழிவுகளை கொட்டியிருக்கிறார்கள். இதற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் வருணுக்கும் தொடர்பு உண்டு ’ என பகீர் புகார் கூறினார். இதனையடுத்து, ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு உண்டா என விசாரிக்கும்படி பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியிருக்கிறது.
செல்வ பெருந்தைகை சொன்னதின் பேரில் வாணிஸ்ரீ விஜயகுமார் என்பவர்தான் இதற்கு மூளையாக செயல்பட்டிருக்கிறார். அவர்தான் இரண்டு வாகனங்களில் ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று சவுக்கு சங்கர் வீட்டில் அராஜகம் செய்திருக்கிறார். இது வீடியோவில் பதிவாகியுள்ளது. தனது பெயர் வெளியே வந்தவுடன் தனது பேஸ்புக் கணக்கை அவர் அழித்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சவுக்கு சங்கரின் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள். தற்போது கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டையும், தி.நகரில் உள்ள சவுக்கு அலுவலகத்தையும் காலி செய்ய சொல்லிவிட்டார்கள். மிரட்டல் காரணமாக இந்த நெருக்கடியை சங்கர் சந்தித்திருக்கிறார். இன்றோடு சவுக்கு மீடியா மூடப்படும் எனவும் அவர் அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில்தான், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாறியிருக்கிறது. சவுக்கு சங்கர் தொடர்ந்து விமர்சனம் செய்தது திமுக ஆட்சியைத்தான். அதிலும், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி போன்றோரை அவர் தொடர்ந்து திட்டி வந்தார். எனவே, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இந்த விஷயத்தில் என்ன மாதிரியான ரியாக்ஷன் காட்டுவார் என்பது தெரியவில்லை. இதற்கு துணையாக சென்னை மாநகர காவல் ஆணையரே இருக்கும்போது சவுக்கு சங்கருக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் பலரும் சொல்லி வருகிறார்கள்.
ஊடகவியலாளர் திரு. @SavukkuOfficial வீட்டில் துப்புறவு தொழிலாளர்கள் என்ற பெயரில் புகுந்து தாக்குதல் நடத்தி, வயதான அவரது தாயாரை நோக்கி ஏவப்பட்ட அச்சுறுத்தல் என்பது மிகவும் கேவலமான, கோழைத்தனமான, அறுவறுக்கத்தக்க செயல்.
வீடு புகுந்தவர்கள் உண்மையில் துப்புறவு தொழிலாளர்களாக இருக்க… pic.twitter.com/NvrEaAJrfQ
— Raj Satyen – SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) March 24, 2025