சிபிஎஸ்சி யில் பயிலக்கூடிய 10th மற்றும் 12th மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு!!

Photo of author

By Gayathri

மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயிலக்கூடிய சிபிஎஸ்சி மாணவ மாணவிகளுக்கு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 18 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் 2025 பிப்ரவரி 15ம் தேதி ஆங்கிலம், பிப்ரவரி 20ல் அறிவியல் தேர்வுகள் நடக்கிறது. பிப்ரவரி மாதம் 27 ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகளும், மார்ச் 10ம் தேதி கணிதம், மார்ச் 13ம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை பொறுத்தமட்டில் பிப்ரவரி 15ம் தேதி தொழிற்கல்வி பாட ( entrepreneurship exam)தேர்வு நடைபெற உள்ளது. பிப்ரவரி 21ல் இயற்பியல், 24ம் தேதி புவியியல், 27 வேதியியல் தேர்வுகள் நடக்க உள்ளது. மேலும் கூடுதல் விபரங்களை மாணவ-மாணவிகள் www.cbsc.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 தேர்வை நாடு முழுவதும் மொத்தமாக சுமார் 44 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வுகள் என்பதும் தேர்வு தேதியில் காலையில் நடக்கும். பெரும்பலான தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடக்கும். சில தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.