குஜராத் மாநிலத்தில் சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நிச்சயமற்ற நிலைகள் தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக் களைக் கருத்தில் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு வாரிய தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோலின்படி சரியான நேரத்தில் தொகுக்க சிபிஎஸ்சி நடவடிக்கை எடுக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவித்தை அடுத்து, சில மாநிலங்கள் செவ்வாய்க்கிழமை அன்று அந்தந்த மாநில வாரியாக தேர்வுகளை மறுபரிசீலனை செய்வதாக கூறப்பட்டது. மற்ற மாநிலங்கள் கலந்து பேசி முடிவு எடுப்பதாக தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் அரியானா மற்றும் குஜராத் மாநிலம் பன்னிரண்டாம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவித்தது. பிற மாநிலங்களில் முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளது.
செவ்வாயன்று CBSC தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் இந்த ஆண்டிற்கான ISC தேர்வை ரத்து செய்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன என்று சிபிஎஸ்இ அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதிப்பீட்டில் திருப்தி அடையாத மாணவர்கள் மறு தேர்வு எழுதலாம் என்றும், தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் பிற அமைச்சர்களுடன் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளின் தற்போது நிலைமை பற்றி விவாதித்து, தேர்வில் சாத்தியமான அனைத்து விருப்பங்களையும் மறு ஆய்வு செய்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
12 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் குறித்த இந்த முடிவு மாணவர்களின் நலனுக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். மேலும் இந்த கொரோனா கல்வியின் நாட்காட்டியை மிகவும் பாதித்துள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தத் தேர்வுகளை குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.