2024 ஆம் ஆண்டு விட இந்த ஆண்டு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் படி 10,12 வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வினாத்தாள் திருத்தும் பணியானது அதிவேகமாக நடைபெற்று வருவதாகவும் பல்வேறு நகரங்களில் வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடையக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது பெரும்பாலான பாட வினாத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்ட விட்டன என்றும் ஒரு சில பாடங்கள் அதாவது வணிகவியல் மனோ தத்துவவியல் போன்ற பாட வினாத்தாள்கள் மட்டுமே மதிப்பிடப்பட்டு வருவதாகவும் இன்னும் சில நகரங்களில் இது போன்ற ஓரிரு வினாத்தாள்கள் மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முதலில் ஒருவர் வினாத்தாள்களை திருத்த மற்றொருவர் மறு மதிப்பீடு செய்ய அதனை தொடர்ந்து அந்த வினாத்தாளை மேற்பார்வையாளர் ஒருவர் பார்த்து திருத்திய பின்பு தான் அதனுடைய கூடுதல் போடப்படுகிறது என்றும் இந்த வேலையானது அதிவேகமாக நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிபிஎஸ்சி மாணவர்களுக்கான மதிப்பெண் மே முதல் வாரத்தில் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.