ஃபேஸ்புக் உடன் இணைந்து ஆன்லைனில் பாடம் நடத்த திட்டம்! சி.பி.எஸ்.இக்கு பெற்றோர்கள் பாராட்டு

0
172

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டு பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு போடப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனை அடுத்து பல பள்ளி கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.எனவே மாணவர்களின் இந்த கல்வி ஆண்டும் வீனாகி விடுமோ என்ற அச்சம் பெற்றோர்களிடையே இருந்து வருகிறது.இந்நிலையில் சி.பி.எஸ்.இ நிறுவனம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இது குறித்து வெளி வந்த அறிக்கையின் படி வருகின்ற ஆகஸ்ட் 10 முதல் 10,000 ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த
திட்டமிட்டுள்ளது.இதற்கான முன்பதிவு ஜூலை 6 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் 10,000 மாணவர்களுக்கு ஆகஸ்ட் 6 முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிபிஎஸ்சி நடத்தும் இந்த திட்டத்திற்கு மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Previous articleபிரபல கிரிக்கெட் வீரர் கைது; எதிர்பாராத சம்பவத்தில் சிக்கினார்..!!
Next articleபிரபல பாடகர் யுவன் சங்கர் ராஜாவின் தற்கொலை முயற்சி..?? அதிர்ச்சியூட்டும் தகவல்?