சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மேலும் தாமதம்! மத்திய அரசு கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!

Photo of author

By CineDesk

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மேலும் தாமதம்! மத்திய அரசு கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!

நாடு முழுவதும் சுமார் 31 லட்சம் மாணவர்கள் மாணவிகள் சி.பி.எஸ்.இ தேர்வுகள் எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக +2 சி.பி.எஸ்.சி மாணவர்கள் தேர்வு முடிவு வந்ததால் தான் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க முடியும் என்பதால் மிகவும் நெருக்கடியாக இருக்கின்றனர்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிவுகளை ஜூலை முதல் வாரம் வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது. தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 10 அல்லது ஜூலை 14ஆம் தேதி சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான தேர்வு வேலைப்படுக்கள் நடந்து வந்தனர். இறுதியில் ஜூலை 10-ந்தேதி சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சிபிஎஸ்சி விடைத்தாள்கள் திருத்தும் பணியில் எதிர்பாராத விதமாக நடக்கவில்லை. விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்படும் திருத்தப்பட்டு விட்டாலும் மறு ஆய்வு பணிகள் இன்னும் முடிக்கவில்லை. அந்தப் பணிகள் முடிவதற்கு இன்னும் 10 முதல் 15 நாட்கள் ஆகும் என தெரிவித்தனர்.

இதற்கிடையே சில மாநிலங்களில் இருந்து விடைத்தாள்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆசாம் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக சிபிஎஸ்சி விடைத்தாள்களை பெறுவதில் தொடர்ந்து தாமதம்எழுந்தது. இதனால்சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடூ ஒத்திவைக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் விடைத்தாள்களை பெற்று ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. எனவே சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் 2 வாரங்கள் தாமதம் ஏற்படலாம் என்று மத்திய அரசு கல்வித்துறை வட்டாரங்களில் தகவல் வெளிட்டனர்.