தொங்கும் பாலம் அறுந்து விழுந்த சிசிடிவி காட்சி! 140 பேர்களின் உடல் சடலமாக மீட்பு!

Photo of author

By Parthipan K

தொங்கும் பாலம் அறுந்து விழுந்த சிசிடிவி காட்சி! 140 பேர்களின் உடல் சடலமாக மீட்பு!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கும் பாலம் ஓன்று அமைக்கப்பட்டது.அந்த தொங்கும் பாலம் 100ஆண்டுக்கு பழமை வாய்ந்ததாகும்.அந்த பாலமானது  சிதைவுற்ற நிலையில் இருந்தது அதனை சீரமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களாக நடந்து வந்தது. சீரமைக்கும் பணி முடிவடைந்தது.அதனை தொடர்ந்து மக்களின் பயன்பாட்டிற்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26ஆம் தேதி அந்த தொங்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் நேற்று மாலை 6.30 மணி அளவில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர் .அங்கு குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் திரண்டனர்.அப்போது அந்த பாலம் அவர்களின் எடையை தாங்க முடியாமல் திடீரென அறுந்து விழுந்தது.

பாலத்தின் மேல் நின்றவர்கள் ஆற்றுக்குள் விழுந்தனர்.இந்த சம்பவம் குறித்து தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் மற்றும் மாநில மீட்புபடையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்ப்பு குழுவினர் ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் குஜராத் பாலம் விபத்தில் 15மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி தொடர்கிறது.அந்த விபத்தில் 400 பேர் ஆற்றில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இதுவரை கர்ப்பிணி பெண்கள் ,குழந்தைகள் உட்பட 140 க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. தற்போது அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.