குஜராத்தை உலுக்கிய பால விபத்து! பிரதமரின் இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் ரத்து பாஜக அதிரடி அறிவிப்பு!

0
69

குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மிகப் பழமையான கேபிள் பாலம் ஒன்று இருக்கிறது. ஆங்கிலேயர் காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த கேபிள் பாலத்தை அந்த மாநில அரசு சமீபத்தில் சீரமைத்தது. கடந்த 26 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக அது திறந்து வைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று புதிதாக திறக்கப்பட்ட பாலத்தை சுற்றி பார்க்க மக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர் சுமார் 500க்கும் அதிகமானோர் வந்திருந்த நிலையில், பாலம் திடீரென்று அறுந்து விழுந்துள்ளது. இதில் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் மக்களை மீட்பதற்குள் உயிர் இழப்புகள் அதிகரிக்க தொடங்கினர்.

சம்பவம் நடைபெற்ற ஒரு சில மணி நேரங்களில் 97 பேர் பிரேதமாக மீட்கப்பட்டனர். இரவு தொடங்கிய மீட்பு பணி தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் பரப்புரைக்காக குஜராத் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று தான் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். இன்று மோடி பேஜ் கமிட்டி சினே மிலன் நிகழ்ச்சி இணையதளம் மூலமாக பங்கேற்க இருந்தார் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக பாஜக சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த பாஜக குஜராத் ஊடக ஒருங்கிணைப்பாளர் பாலம் விபத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் 2900 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளனர். இதில் பிரதமர் பங்கேற்கவில்லை என்றாலும் கூட துறை சார்ந்த அதிகாரிகள் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்கள் என்று பாஜக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேபிள் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவரையில் 177க்கும் அதிகமானோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் 19 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் மேட்டூர் பணியில் ராணுவம் கடற்படை மற்றும் விமானப்படையினர் என்று முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இதில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சமும் காயமடைந்த ஒரு குடும்பத்தினருக்கு 50000 வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாநில அரசை பொருத்த வரையில் உயிரிழந்தோருக்கு 4 லட்சம் ரூபாயும் காயமடைந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் தெரிவித்துள்ளார்.