தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி – வெளியான அறிவிப்பு.!!

0
283
AR Rahman
AR Rahman

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி – வெளியான அறிவிப்பு.!!

அபுதாபியில் உள்ள ஓய்வு பெறும் பொழுதுபோக்கு அம்சங்களில் யாஸ் தீவு முதன்மையானதாக இருக்கிறது. இந்த தீவில் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் யாஸ் தீவுக்கு வருவார்கள்.

இதன் காரணமாக யாஸ் தீவில் பிரம்மாண்டமான இசை கச்சேரி மற்றும் பிரபலமான சமையல் கலைஞர்களின் சுவையான உணவுகள் உள்ளிட்டவை அவர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் ஏ.ஆர் ரகுமானின் பிரம்மாண்ட இசை கச்சேரி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அங்கு  நடைபெறவுள்ளது . வருகிற 29 ஆம் தேதி யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் ஏ.ஆர் ரகுமானின் பிரம்மாண்ட இசைக் கச்சேரியானது நடைபெறவுள்ளது.

இதுகுறித்து இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் கூறியதாவது, அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் முதன் முறையாக இசை கச்சேரியை நடத்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். உலகெங்கும் உள்ள ரசிகர்கள் என்னுடைய இசையை கண்டு ரசிக்க போகிறார்கள் என்பதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அபுதாபி ஒரு முக்கியமான ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு சுற்றுலாத்தளமாக இருப்பதால் அங்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

அவர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகை இசை கச்சேரியை கொண்டாடுவதை நினைக்கும் போது மிகவும் ஆவலாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் யாஸ் தீவில் புகழ்பெற்ற சமையல் கலைஞர்களான வினீத் பாட்டியா, ரன்வீர் ப்ரார் போன்றவர்களின் உணவுகளும் இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமில்லாமல் யாஸ் தீவில் நடைபெறும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Previous articleராணுவ வீரர்களோடு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பிரதமர் மோடி! வெளியான தகவல்
Next articleகுழந்தைகள் புகைப்படத்தில் வைரமுத்து பற்றி கமெண்ட் போட்ட நபர்… உச்சகட்ட கோபத்தில் சின்மயி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here