ஆஹா, இது சூப்பர்! தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பெருமை! முதல்வர் அறிவிப்பு

Photo of author

By Parthipan K

ஆஹா, இது சூப்பர்! தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பெருமை! முதல்வர் அறிவிப்பு

ஆஹா, என்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி. இது தமிழகத்திற்கும் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமையான விஷயம் ஆகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை சிறப்பிக்கும் நாளாக விளங்குகிறது. அது போல் இனிமேல் தமிழ்நாடு நாள் என ஒன்றை நம் தமிழ் மக்கள் கொண்டாடவிருக்கிறோம்.

ஆம், இனி நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஏற்கனவே 110 விதியின் கீழ் தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்கள் உருவாகும் என முதல்வர் கூறியுள்ளார். அதை தொடர்ந்து இன்றும் 110 விதியின் படி தமிழ்நாடு நாள் என தமிழகத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் அவ்விதியின் படி நிறைய அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஒன்று , தமிழறிஞர்களுக்கு புதிய விருதுகளையும், வரலாற்றில் இல்லாத அளவிற்கு நிதியுதவிகளையும் வழங்கி வந்த மறைந்த செல்வி ஜெயலலிதா, மேலும் அதை தொடர்ந்து அவர்கள் வழியில் செயல்படும் இந்த அரசும், இது வரை 149 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கி, அவர்தம் மரபுரிமையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கியுள்ளது.

அவற்றின் அடிப்படையில் பரிசு பெறுவோர் விவரம்;

  • பண்டித ம. கோபால கிருட்டிணன்
  • புலவர் இறைக்குருவனார்
  • தமிழறிஞர் அடிகளாசிரியர்
  • முனைவர் இரா.இளவரசு
  • உளுந்தூர் பேட்டை திரு. சண்முகம்
  • பாபநாசம் குறள்பித்தன்
  • கவிஞர் நா. காமராசு இவர்களின் படைப்புகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் நாட்டுடைமையாக்கப்படும். இதற்கென 35 லட்சம்
    ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும்,முதல்வர் கூறியதாவது தனி தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நவம்பர் 1, 1956-ஆம் நாளினை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர்-1ஆம் நாள் ‘தமிழ்நாடு தினம்’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார்.

தமிழ் மொழிக்கு ஒரு இருக்கையும் ஆசிரியரும் வாரணாசி இந்து பல்கலைக் கழகம், கவுகாத்தி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இயங்கிவரும் தென்னிந்திய மொழிகள் துறையில் தலா ஒரு தமிழ் உதவிப் பேராசிரியர் பணியிடம், 36 லட்சம் ரூபாய் தொடர் செலவினத்தில் தோற்றுவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உலகபொது மறை என அழைக்கப்படும் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு ஒரு ஆண்டும் ஒரு இந்திய மொழி ஒரு உலக மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து திருக்குறளை பெருமை படுத்தபடும். இதற்கென 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டு இந்திய மொழிகளான அசாமி மற்றும் சிந்தி மொழிகளிலும், உலக மொழியான டஃப்ரு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்பதை தெரிவித்தார்

டாக்டர். ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளின் தலைவர் என அனைவராலும் அறியப்படும். அவரின் தமிழ்ப் பணியினைப் போற்றி சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் தமிழ் பல்கலைகழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும். இதற்கென ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும் ‘ஒருங்கிணைந்த உயர்கல்வி வளர்ச்சித் திட்ட”த்தின் கீழ், தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்பிக்கும் வகையில் 20 கோடி ரூபாய் நிதியில் புதிய கட்டுமான வசதிகள், மேம்பாடு மற்றும் வளர்ச்சிப் பணிகள், புதிய கருவிகள் வாங்குதல் மற்றும் ஏனைய வசதிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

அண்டை மாநிலம் கர்நாடகா, கர்நாடகா நாள் என கொண்டாடுவது போல நாமும் தமிழ்நாடு நாள் என கொண்டாடுவோம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.