போராட்டகளமாகும் தமிழகம் அரசு என்ன செய்யும்!

0
66

தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம், ஏன் எதற்கு இந்த போராட்டம். எங்களுக்கு தனி மாவட்டம் வேண்டும் என மயிலாடுதுறை மக்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர்.

மக்களின் கோரிக்கை என்னவென்றால் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும். அதாவது மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, தரங்கம்பாடி, குத்தாலம், செம்பனார் கோவில், வைதீஸ்வரன் கோவில், ஆகியவை சேர்த்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என குத்தாலம், தாரங்கப்பாடி, மணல்மேடு மக்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர்.

அதாவது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரகள் செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் புதிய மாவட்டங்கள் ஆகும். என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தென்காசி நெல்லையில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும், இரண்டு புதிய மாவட்டங்களுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் எங்களது கோரிக்கையும் நிறைவேற்றவேண்டும் என மயிலாடுதுறை மக்கள் போராடுகின்றனர்.

மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, தரங்கம்பாடி, குத்தாலம், செம்பனார் கோவில், வைதீஸ்வரன் கோவில் ஆகிய ஊர் மக்களின் போராட்டங்களை ஏற்று அரசு செவிசாய்க்குமா? அல்லது முடியாது என்று கூறுமா?
என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K