கரடி பொம்மையை தேடிக் கொடுக்க முன்வந்துள்ள பிரபலங்கள்

Photo of author

By Parthipan K

கரடி பொம்மையை தேடிக் கொடுக்க முன்வந்துள்ள பிரபலங்கள்

Parthipan K

சிவப்பு, வெள்ளை நிற உடை, ஒரு மூக்குக் கண்ணாடி. அவையே, காணாமல்போன ஒரு கரடி பொம்மையின் அடையாளங்கள். ஒரு கரடி பொம்மைக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்று சிலர் எண்ணலாம். கனடாவைச் சேர்ந்த குமாரி மாரா சொரியானோவிற்கு அது சென்ற ஆண்டு புற்றுநோயால் இறந்துபோன தம் அம்மா கொடுத்த கடைசிப் பரிசு. அதில் அவருடைய தாயின் குரல் பதிவாகியுள்ளது. தம் அம்மாவின் நினைவு வரும்போதெல்லாம், கரடி பொம்மையைக் கட்டி அணைத்துக்கொள்வேன் என்று குமாரி மாரா CNN செய்தி நிறுவனத்திடம் கூறினார். சென்ற வாரம் அவர் வீடு மாறியபோது அந்தக் கரடி பொம்மை இருந்த பை திருடு்போய்விட்டது. அந்தப் பையில் கடவுச்சீட்டுகள், iPad, குடியுரிமை ஆவணங்கள் எனப் பல பொருள்கள் இருந்தன.

மனம் உடைந்துபோன குமாரி சொரியானா, அந்தக் கரடி பொம்மையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். பொம்மையின் படம்கொண்ட சுவரொட்டிகளைச் சாலையில் ஒட்டினார். செய்தி அறிந்த ஹாலிவுட் நட்சத்திரங்களும் உதவ முன் வந்துள்ளனர். நடிகர் ரையன் ரேனோல்ட்ஸ் (Ryan Reynolds) கரடி பொம்மையைத் திருப்பிக் கொடுப்பவருக்கு எந்தக் கேள்வியுமின்றி சுமார் 5,100 வெள்ளி கொடுப்பதாக தமது Twitter பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்தக் கரடி பொம்மையைக் கண்டால், காவல்துறைக்குத் தகவல் கூறும்படி கனடாவின் வென்கூவர் நகரக் காவல்துறையும் Twitterஇல் பதிவு செய்துள்ளது. ஆனால், இதுவரை அந்தக் கரடி பொம்மை கிடைக்கவில்லை என்று CNN தெரிவித்தது.