வசமாக சிக்கிய செல்போன் திருடர்கள்! தர்ம அடி கொடுத்த போலீசார்!
காஞ்சிபுரம் மாவட்டம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் புதுார் கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ்பாபு இவர் சுங்குவார் சத்திரம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 13ம் தேதி மாலை ஆறு மணியளவில் வேலைக்கு செல்வதற்காக கம்பெனி பேருந்திற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி ஒரு இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது.
மேலும் அவர் தனியாக இருப்பதை கண்ட அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் வந்துள்ளனர்.
அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.அதனால் சந்தேகம் அடைந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.அந்நிலையில் அவர்கள் கைபேசியை பறித்ததை ஒப்பு கொண்டனர்.
இதனையடுத்து அந்த விசாரணையில் அய்யப்பன் 22, சுரேஷ் 21,சலீம் 20மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.மேலும் அந்த கும்பலில் இருந்த சிறுவனை சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியிலும் மற்ற மூவரை சிறையிலும் அடைத்தனர்.இந்த சம்பம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.