நோய்தொற்று பாதித்த பெற்றோர்களின் குழந்தைகளை பாதுகாக்க பாதுகாப்பு மையம்!

Photo of author

By Sakthi

நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகளை பாதுகாப்பதற்காக தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நல மையம் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார் இந்த மையம் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வுகளை செய்தார்கள்.அதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு நோய்த் தொற்று பாதிப்பு குறையும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அதற்கான நடவடிக்கைகள் எல்லாம் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆக்சிஜன் தேவை தொடர்பான ஆய்வுகளை நாங்கள் நடத்தி வருகிறோம், ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக்கோளாறு தற்போது சரி செய்யப்பட்டு இருக்கிறது. ஆக்சிஜனை பெறுவதற்கு போதிய வெப்ப நிலை அடைய வேண்டும், ஆகவே வெப்பநிலையை உயர்த்த வேண்டிய வேலைகள் நடந்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு மிக விரைவில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் தெரிவித்ததாவது, ஒடிசா டூர்கேலாவில் இருந்து 5 லாரிகளில் தூத்துக்குடிக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து அருகில் இருக்கின்ற மாவட்டங்களின் தேவைக்கு ஏற்றவாறு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படு. இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்படும் பெற்றோர்களின் தொற்று குழந்தைகளை பாதிக்காத வண்ணம் இந்த மையத்தில் பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த மையத்தில் குழந்தைகளை சேர்ப்பதற்கு சைல்டு லைன் 1098 தொலைபேசி எண் 0462 255 1953 வாட்ஸ்அப் எண் 9944746791 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.