Central Bank of India Job: 12 காலிப்பணியிடங்கள்.. மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!! முழு விவரம் உள்ளே!

Photo of author

By Divya

Central Bank of India Job: 12 காலிப்பணியிடங்கள்.. மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!! முழு விவரம் உள்ளே!!

நாட்டின் முதன்மை வங்கிகளில் ஒன்றான Central Bank of India-இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள 12 Faculty பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் ஜூன் 18 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: Central Bank of India

பணியின் பெயர்: Faculty

காலிப் பணியிடங்கள்: Central Bank of India,Faculty பணிக்கு மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

Faculty பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் ஏதேனும் ஒரு வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிக்கு 63 வயதிற்குள் இருக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பம் செய்யலாம்.Faculty பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Faculty பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி,ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த ஜூன் 18 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பம் செய்திட வேண்டும்.