திருநங்கைகளை கவலை படாதீங்க!! உங்களுக்கு உதவித்தொகை!! அதிரடி காட்டும் மத்திய அரசு!!

Photo of author

By Kowsalya

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு உதவித்தொகையாக ரூ 1500 கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மிகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

திருநங்கைகளின் நலனை கவனிக்கும், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில்,திருநங்கைகளின் அடிப்படைத் தேவைகளுக்காக உடனடியாக தலா ரூ 1500 உதவி தொகையாக வழங்க வேண்டும் என ஆலோசனை செய்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திருநங்கைகளுக்கு ரூ 1500 வழங்கும் உதவி குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் பரப்ப வேண்டும்’ ‌ அனைத்து திருநங்கைகளும் பயன்பெற வேண்டும் என, தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள் ஆகியவை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இந்த உதவித் தொகை மிகவும் கணிசமாக இருப்பதால் அதிகரித்துத் தருமாறு கோரிக்கை எழுந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

எவ்வாறு விண்ணப்பிப்பது என்று தெரியாமல் கவலை வேண்டாம். கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு ஆகியவற்றுடன் தங்களது சுய விவரத்தையும் அளித்து விண்ணப்பிக்கலாம். திருநங்கைகள் அல்லது அவர்கள் சார்பில் சமுதாய அமைப்புகள் http://forms.gle/H3BcREPCy3nG6TpH7 என்ற இணைப்பில் உள்ள படிவதத்தில் ஆதார் எண், தொலைபேசி எண், வங்கி கணக்கு எண் போன்ற அடிப்படை விவரங்களை தெரிவித்து இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு மே 31 தேதி கடைசி தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.