மத்திய  அரசின் காப்பீடு நிறுவனம்  வேலை வாய்ப்பு!! 500 பேருக்கு நேரடி வேலை நியமனம்!!

Photo of author

By Rupa

மத்திய  அரசின் காப்பீடு நிறுவனம்  வேலை வாய்ப்பு!! 500 பேருக்கு நேரடி வேலை நியமனம்!!

Rupa

Employment in central government life insurance company for those who have completed their degree!!

மத்திய அரசு இளைஞர்களுக்கு என பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்களை  அறிவித்து வருகிறது. இளைஞர்கள் சுயமாக தொழில்  தொடங்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில்  மத்திய  அரசின் காப்பீடு நிறுவனம்  வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்  என்ற நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை காப்பீட்டு  நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தில்  உதவியாளர் பணியிடங்களுக்கு  அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 41 இடங்கள், OBC  பிரிவினருக்கு 113 இடங்களும். எஸ்,டி, பிரிவினருக்கு 43 இடங்களுக்கும் மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 33 இடங்களும் வழங்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில்  ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

ஆன்லைனில்  விண்ணப்பிக்க நாளை அக்டோபர் 24 முதல் நவம்பர் 11 கடைசி நாளாக உள்ளது. வயது வரம்பு குறைந்தபட்சம்  21 முதல் அதிக பட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள். SC,ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ரூ.850.  SC,ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ .100 ஆகும்.

எழுத்து மற்றும் சான்றிதழ்  சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். https://nationalinsurance.nic.co.in/ என்ற இணையதளத்தின்  வாயிலாக விண்ணப்பிக்கலாம்.