மத்திய அரசு வைக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது!! அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு புதிதாக ஐந்து நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு தமிழக அரசு எந்த அனுமதியும் தராமல் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில் புதிய சுரங்கம் அமைக்கப்பட்டால் காவிரி டெல்டா படுகைகள் பாலைவனம் போல ஆகிவிடும் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் எப்படி அனுமதி தரப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
அதே போல சேலம் இரும்பாலை வளாகத்தில் ஐநூறு ஏக்கர் மட்டுமே தற்போது ஆலையின் பயன்பாட்டில் உள்ளதாகவும் மீதம் உள்ள சுமார் 3500 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு திரும்ப பெறுவதுடன் தனியார் மயம் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஒருமித்த கருத்துடன் குரல் கொடுத்து தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட வேண்டும்.
இதே போல மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் திட்டத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டம் முழுமையாக தடை செய்வதற்கு ஆளுநர் இன்னும் ஏன் தாமதம் செய்கிறார். அவரின் தாமதத்தால் அப்பாவியான 49 உயிர்கள் பலியாகி உள்ளதற்கு ஆளுநரே பொறுப்பு.
எனவே இனியும் அவர் தாமதிக்காமல் உடனடியாக யாருக்கும் தயங்காமல் கையெழுத்திட்டு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.