நாளை முதல் அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு! விண்ணப்ப கட்டணம் அறிவிப்பு!!

0
147
#image_title

நாளை முதல் அதிமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு! விண்ணப்ப கட்டணம் அறிவிப்பு!!

அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் தோற்றுவித்த போது பல்வேறு விதிகளை விதித்திருந்தார். அதன்படி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது அதிமுக. ஜெயலலிதா இருந்த போதும் அதே நிலையை கடைபிடித்து வந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது அதிமுகவில் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமியும் எம்ஜிஆர் வகுத்த விதிகளை பின்பற்றி வருகிறார். அதன்படி நாளை முதல் அதிமுக தலைமை கழகத்தில் உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பம் வழங்கப்படுவதாகவும், இதனை மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பெற்று சென்று அணைத்து கிளை கழக நிர்வாகிகளிடம் கொடுத்து புதிய உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும்.

உறுப்பினராக சேர்வதற்கு பதிவு கட்டணமாக பத்து ரூபாய் செலுத்தி சேர வேண்டும், தலைமை கழகம் அறிவித்துள்ள விதிமுறைகளை தவறாது கடைபிடித்து ஒவ்வொரு வீட்டிற்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும். மேலும் மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு கீழ் உள்ள நிர்வாகிகளை அழைத்து செயற்குழு கூட்டி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தற்போது உள்ள நிலையில் அதிமுக பாஜக கூட்டணி என்பது அவ்வப்போது சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், நடைபெற போகும் ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தி கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும் என தலைமை கழகம் மூலம் அறிவிக்கப்படுவதாக அதிமுக நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது.