இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஏற்பட்டு வரும் அதிக அளவு காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக இது போன்ற ஒரு முடிவை எடுத்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10 வருட டீசல் மற்றும் 15 வருட பெட்ரோல் வாகனங்கள் ANPR மூலமாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அந்த வாகனங்களுக்கான எரிபொருள் வழங்குவது முழுவதுமாக தடை செய்யப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் எரிவாயு நிலையங்களில் ANPR கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் பழைய கார்களை கண்டறிவதன் மூலம் அந்த கார்களுக்கு எரிவாயு வழங்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குருகிராம், ஃபரிதாபாத், காசியாபாத், கௌதம் புத்த நகர், சோனிபத் ஆகிய இடங்களில் இந்த விதி நவம்பர் 1 ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வரும் என்றும் அதற்கான முன்னேற்பாடாக அக்டோபர் மாதத்தில் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி NCR மற்றும் மீதமுள்ள மாவட்டங்களில் மார்ச் 31 2026 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஏப்ரல் 1 2026 முதல் டெல்லியில் இருக்கக்கூடிய அனைத்து பழைய வகை வாகனங்களுக்கும் குறிப்பாக கார்களுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிவாயு தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இதுவரை 27.5 லட்சம் தடை செய்யப்பட்ட வாகனங்கள் இருப்பதாகவும் உத்திரபிரதேசத்தில் 61 லட்சம் மற்றும் ஹரியானாவில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட வாகனங்கள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காற்று மாசுபாட்டை அதிகரிக்க கூடிய வாகனங்களை கண்டறிந்து அவை முழுவதுமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தடை செய்யப்படும் என்றும் இதற்காக போக்குவரத்து சாலைகளில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களும் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.