அதிகரிக்கும் கொரானா பரவல்!! தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! அதிகரிக்கும் கொரானா பரவல்!!   

0
239
Central government warning to 8 states including Tamil Nadu!! Increasing spread of Corona!!
Central government warning to 8 states including Tamil Nadu!! Increasing spread of Corona!!
அதிகரிக்கும் கொரானா பரவல்!! தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! அதிகரிக்கும் கொரானா பரவல்!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே 500-க்கும் மேல் கொரானா பாதிப்பு பதிவாகி வரும் நிலையில், இன்று பாதிப்பு 528 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 528 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பில் 258 ஆண்கள் மற்றும் 270 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 108 பேருக்கும், கோவையில் 54 பேருக்கும், கன்னியாகுமரியில் 30 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 4 பேர் உள்பட மொத்தம் 37 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 492 பேர் குணம் அடைந்தனர். இதனிடையே தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை இன்று கடிதம் எழுதியிருந்தது.
கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தயார் நிலைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்டு இருந்தார்.
Previous articleஎன் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது.. ரசிகர்கள் குறித்து தோனி உருக்கம்!
Next articleசட்டப்பேரவையில் புதிய தீர்மானம்.. 12 மணி நேர வேலை!! சீமான் கேள்வி!