மத்திய அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம்!! அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கம்!!

0
94
Central government's free laptop scheme!! All India Council of Technology Explanation!!
Central government's free laptop scheme!! All India Council of Technology Explanation!!

தமிழகத்தில் இலவச மடிக்கணினி திட்டத்தை அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது துவங்கி வைத்தது. ஆனால் சில காரணங்களுக்காக தற்பொழுது மடிக்கணினி ஆனது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச மடிக்கணினி வழங்குவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின் விளக்கம் :-

இலவச லேப்டாப் வழங்க இருப்பதாக இணையதளத்தில் பரவி வரும் செய்தி பொய்யானது என்று தெரிவித்துள்ளது. இது முற்றிலும் தவறானது. பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்துகிறோம். இதை நம்பி பள்ளி மாணவர்களோ, பெற்றோர்களோ தங்களது விவரங்களையும் அல்லது கட்டணங்களையும் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஏ.ஐ.சி.டி.ஐ தொடர்பான தகவல்களை என்ற www.aicte-india.org அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் மாணவர்களை அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு.
Next articleWhatsapp பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! புதிய மற்றும் அசத்தலான அப்டேட்!!