மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான நிதின் கட்கரிக்கு (வயது 63) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
https://twitter.com/nitin_gadkari/status/1306262137346514950?s=20
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் உடல் பலவீனமாக உணர்ந்ததை தொடர்ந்து வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவரை அணுகினேன். அப்போது கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரின் ஆசிகளுடன் நான் ஆரோக்கியமாக உள்ளேன். இருப்பினும் பிறரது பாதுகாப்புக்காக, நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
https://twitter.com/nitin_gadkari/status/1306262139389108224?s=20
மேலும், கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.