நியாயவிலைக் கடைகளில் ஊக்கத்தொகை வழங்கப்படும்:! அதிரடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

0
84

நியாயவிலைக் கடைகளில் ஊக்கத்தொகை வழங்கப்படும்:! அதிரடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

பொது விநியோக திட்ட நியாய விலைக் கடைகள் மூலம் அரசு பல்வேறு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தும் பொழுது நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகின்றது.அவர்களின் இந்த கூடுதல் பணிச் சுமையை ஈடுசெய்ய ஒரு குடும்ப அட்டைக்கு, 0.50 பைசா வீதம் ஊக்கத்தொகை,வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.

அண்மையில் அத்தியாவசிய பொருட்களோடு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு முகக் கவசங்கள் வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பித்தது,இந்நிலையில் இந்த முகக்கவசங்களை
விநியோகம் செய்ய விற்பனை கருவிகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு,அத்தியாவசியப் பொருட்களுடன் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் இரண்டு முகக் கவசங்கள் வீதம் வழங்கப்பட்டு வருகின்றது எனவும்,இதுபோன்று பொது விநியோக திட்ட நியாய விலைக் கடைகள் மூலம் அரசின் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் பொழுது நியாய விலை கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகின்றது.
இவ்வாறுஏற்படும் கூடுதல் பணிச் சுமையை ஈடுசெய்ய ஒரு குடும்ப அட்டைக்கு 0.50 பைசா வீதம் அதாவது 69,09,385 குடும்ப அட்டைகளுக்கான மொத்தம் 34,54,692.50 ரூபாய் நியாயவிலை கடை பணியாளர்களுக்கும், கட்டுநர்களுக்கும், ஊக்கத்தொகையினை வழங்க தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

 

 

 

 

author avatar
Pavithra