மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று!!

Photo of author

By Parthipan K

மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அமைச்சர்கள், முதல்வர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களில் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.