முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே அடுத்தடுத்து கொரோனா உயிரிழப்பு:? முழு ஊரடங்கு பிறப்பிப்பு?

0
51

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டபுர பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 46 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

சேலம் மாவட்டம மேட்டூர் வட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டில் வசிக்கும் ஒரு குடும்பம் கடந்த வாரம்,அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து கிடா விருந்து ஏற்பாடு செய்தனர்.இந்நிலையில் கிடா விருந்து முடிந்த அடுத்தடுத்த நாட்களில் அந்த பகுதியில் உயிரிழப்பு ஏற்பட்டது.

ஐந்தாவது வார்டில் வசிக்கும் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றுதான், 70 வயது மதிக்கத்தக்க அவரது தந்தை மரணமடைந்துள்ளார்.மேலும் கிடா விருந்து ஏற்பாடு செய்த வீட்டிற்கு,அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் 20 வயது மாற்றுத்திறனாளி பெண் மற்றும் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் என அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.இதனால் இந்த உயிரிழப்பு
கொரோனாவால் ஏற்பட்டிருக்கலாமென தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் அனைவரும் அச்சம் அடைந்தனர்.

இந்நிலையில் தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த சுகாதாரத்துறை மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்,கிடா விருந்தில் கலந்து கொண்டவர்கள்,மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என
சுமார் 152 பேருக்கு நேற்று மாலை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று பரிசோதித்த 152 பேரில் 46 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளதாக, அதிகாரபூர்வமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஜலகண்டாபுரம், ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிக்கு வரும் அனைத்து சாலைகளையும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது.மேலும் அந்தப் பகுதிக்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு,இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் சார்பிலும் சுகாதாரத்துறை சார்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

author avatar
Pavithra