இந்திய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் செல்ல முடியாது என திட்டவட்டமாக கூறிய நிலையில், பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து வரும் நிலையி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது கிந்த முறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ளது. இந்நிலையில் போட்டிகளில் கலந்து கொள்ள இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அரசு மறுத்ததாக பிசிசிஐ தெரிவித்து விட்டது. பாகிஸ்தான் முதல் முறை 17 ஆண்டுகளுக்கு பின் நடத்தும் தொடர் இதுதான்.
இதற்கு இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்று திட்டவட்டமாக கூறிய நிலையில், பாகிஸ்தான் இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் நாங்கள் இந்த தொடரில் இருந்து விலகி விடுவோம் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் ஐசிசி இந்தியா உடனான போட்டியை தென்னாபிரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது இந்த போட்டிகளை இந்தியாவில் நடத்த மறைமுகமாக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணி விளையாட வில்லை என்றால் ஒளிபரப்பு வருவாயில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.