இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஆனால் இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்று வெளியேறியது.
இதனை தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ரோஹித்,விராட் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் பிசிசிஐ அவர்களிடம் அடுத்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முழு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பும்ரா இங்கிலாந்து தொடரில் ஓய்வு பெற உள்ளார். ரோஹித் மற்றும் விராட் ஓய்வு பெறுவதாக கூறப்படுகிறது. இவர்களை தொடர்ந்து கே எல் ராகுல் உடல் சோர்வு காரணமாக ஓய்வு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அணியில் இடம்பெற உள்ள வீரர்களின் கணிப்பு ரோஹித் மற்றும் கில் தொடக்க வீரர்களாக களமிறங்குவார் மாற்று வீரராக ஜெயஸ்வால் இருப்பார். அடுத்தடுத்து கோலி மற்றும் ரிஷப் பண்ட் கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல் அல்லது வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது ஷமி,, மேலும் பெஞ்ச வீரர்களாக ஆகாஷ் தீப் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜெய்ஸ்வால் இருப்பார்கள்.