Champions trophy.. வெளியிடப்பட்ட பயிற்சி அட்டவணை!! போட்டிகளில் கலந்து கொள்ள மறுத்த இந்திய அணி!!

0
5
Champions trophy.. Training schedule released!! The Indian team refused to participate in the matches!!
Champions trophy.. Training schedule released!! The Indian team refused to participate in the matches!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இதற்கான பயிற்சி ஆட்டங்கள் பிப்ரவரி 14 ஆம் தேதி ஆன இன்று பாகிஸ்தானில் துவங்கியுள்ளது. இந்த பயிற்சி ஆட்டங்களில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என மறுத்துவிட்டது. மேலும் நேரடியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபில் பங்கேற்க இருப்பதாகவும் இந்தியாவிற்கான ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அமீரகத்தில் நடத்தப்படும் என்றும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி அட்டவணை :-

பிப்ரவரி 14 – பாகிஸ்தான் ஷஹீன்ஸ் v ஆப்கானிஸ்தான், கடாபி ஸ்டேடியம், லாகூர்

பிப்ரவரி 16 – நியூசிலாந்து v ஆப்கானிஸ்தான், தேசிய ஸ்டேடியம், கராச்சி

பிப்ரவரி 17 – பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் எதிராக தென்னாப்பிரிக்கா, தேசிய மைதானம், கராச்சி

பிப்ரவரி 17 – பாகிஸ்தான் ஷஹீன்ஸ் v பங்களாதேஷ், ஐசிசி கிரிக்கெட் அகாடமி, துபாய்

அனைத்து ஆட்டங்களும் பகல்-இரவு போட்டிகளாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இந்த பயிற்சியை ஆட்டங்களுக்கு மறுத்ததற்கு சமீபத்தில் முடிந்த இந்தியா இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளே காரணம் என்றும் தங்களுக்கு பயிற்சி ஆட்டங்கள் வேண்டாம் என மறுத்து இந்திய அணி ஆனது நாளை துபாய்க்கு பயணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.

Previous articleவிவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! நெல் அறுவடைக்கு உதவ தயாரான அரசு!!
Next articleஉயர் நீதிமன்றத்தில் ஆஜரானார் இளையராஜா!! அவரது முழு ஈடுபாடு!!