இந்தப் பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

0
152

இந்தப் பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது .தென் தமிழக கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசகூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Previous articleரேசன் கடைகளில் இனி இதை வாங்க கட்டாயப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை – அமைச்சர் அதிரடி
Next articleஈரோட்டில்  பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம் ? போலீசார் வழக்கு பதிவு!