ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம்! நினைவிடத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மரியாதை!

Photo of author

By Sakthi

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது 6 முறை முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையையும், தமிழக அரசியலின் இரும்புப் பெண்மணி என்று பெயரெடுத்தவர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக, அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்த சூழ்நிலையில், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2016ஆம் வருடம் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ஜெயலலிதா தன்னுடைய 68 வயதில் இயற்கை எய்தினார். இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் அனுசரித்து வருகிறார்கள்.

இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்றேன் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்த இருக்கிறார்கள். அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அதிமுகவின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேநேரம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் தெரிவித்து வருகிறார்கள், அதே காரணத்தை தெரிவித்து தான் அவருடைய மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று தற்போதைய அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பி எஸ் அவர்கள் கோரிக்கையின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தார். அந்த விசாரணை தற்போது வரையில் நடைபெற்று வருகிறது.

அதோடு தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இருந்து வரும் மர்மத்தை நிச்சயமாக நாங்கள் களைந்து எடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது விசாரணையின் முடிவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மாநிலத்தில் இருக்கும் மர்மம் என்ன என்பது தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.