தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு!!

0
188
Chance of heavy rain in Tamil Nadu from today till 9th!!
Chance of heavy rain in Tamil Nadu from today till 9th!!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஒரு சில மாவட்டத்தில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகத்தில் இன்று (ஜன., 3) முதல் வரும் ஜன., 9ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு இன்று முதல் வரும் ஜன.,5ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Previous articleஇந்த ஆட்டம் போதுமா கொழந்த??  தெரியாமல் சீண்டிய கொன்ஸ்டாஸ்.. அடுத்த நொடியே சீறி பாய்ந்த பும்ரா!!
Next articleஎனக்கு சனி இந்த பும்ரா தான்.. இத்தனை முறையா இவரிடம் ஆட்டமிழப்பது?? கொன்ஸ்டாஸ் பண்ண வேல!!