அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா!
கடந்த வாரம் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும் புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம் ,புதுவை,காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என வெளியிட்ட தகவலின் பேரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்ததந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தான் பள்ளிகள் அனைத்தும் செயல்பட தொடங்கியது தற்போது அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று வலுவிழந்தது.
ஆனால் தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது.இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் திருநெல்வேலி,கன்னியாகுமரி,தூத்துக்குடி,தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதினால் மழையினால் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது அதனால் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.