எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

0
190

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (29.01.2022) தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும்  தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளைய தினம் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது.

அதையடுத்து திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்களை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleஎன்னது இது கொரோனாவின் உருமாற்றம் கிடையாதா? என்ன சொல்கிறது ஆய்வு முடிவு?
Next articleஇவர்கள் இருவரும் உலக கோப்பையை வென்று தருவார்கள்! சச்சின் நம்பிக்கை! யார் அவர்கள்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here