“குடியுரிமை மசோதாவில் இஸ்லாமியர்கள் ஏன் இடம்பெறவில்லை ??? ” – பா.ஜ.க வின் சந்திர குமார் போஸ் அதிரடி !!!

0
155

மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்திற்கு, ‘இந்திய அளவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்’ மிகப் பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. நாளுக்கு நாள், ட்விட்டர், பேஷ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்களின் எதிர்ப்பு பல்வேறு வகைகளில் வெளிப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, மேற்கு வங்க மாநில  பா.ஜ.க  துணை தலைவரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரனுமான, சந்திர குமார் போஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியுள்ளதாவது “குடியுரிமை திருத்த சட்டம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல, என கூறப்படுகிறது, ஆனால் ஹிந்து, சீக்கியர், கிறிஸ்துவர் என குறிப்பிட்ட மதத்தினர் மட்டும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அப்படியானால் முஸ்லீம் மதத்தினர் ஏன் இதில் இடம்பெறவில்லை. இது குறித்து வெளிப்படையான விளக்கம் தேவை “என்று அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous articleதிடீரென லண்டன் சென்ற விஜய்: தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?
Next articleநயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம்