திடீரென லண்டன் சென்ற விஜய்: தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

0
52

திடீரென லண்டன் சென்ற விஜய்: தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய் நேற்று முன்தினம் சென்னை திரும்பி அதன் பின்னர் தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்றுள்ளார். லண்டனில் அவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை கொண்டாடிவிட்டு அதன் பின்னர் ஜனவரி 10-ஆம் தேதி விஜய் சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பொங்கலுக்கு பின்னர் தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும், இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஷிமோகாவில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் விஜய் இல்லை என்றாலும் மற்ற காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

author avatar
CineDesk