லாரன்ஸ் & வடிவேலு காம்போவில் P வாசு இயக்கும் ‘சந்திரமுகி 2’… ஷூட்டிங் பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்!

0
153

லாரன்ஸ் & வடிவேலு காம்போவில் P வாசு இயக்கும் ‘சந்திரமுகி 2’… ஷூட்டிங் பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்!

சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக உள்ளது.

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை  பி.வாசு இயக்கி, ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் சென்னை சாந்தி திரையரங்கில் 890 நாட்கள் ஓடியது. ரஜினியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. சந்திரமுகி2 வில் ரஜினிக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய நடிகர் வடிவேலு இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாகுபலி மற்றும் RRR ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் மரகதமணி இசையமைக்கிறார்.

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி முதல் மைசூரில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleதள்ளிப் போகும் விஷாலின் ‘லத்தி’ திரைப்பட ரிலீஸ்… இதுதான் காரணமா?
Next articleபொன்னியன் செல்வன் படத்தில் சிம்பு விலகுவதற்கு காரணம்! லேடி சூப்பர் ஸ்டார் தான் வெளியான தகவல்!