தள்ளிப் போகும் விஷாலின் ‘லத்தி’ திரைப்பட ரிலீஸ்… இதுதான் காரணமா?

0
91

விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். இவர் நடித்த சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.

ஆனால் சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. கடைசியாக ரிலீஸ் ஆன வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் அட்டர் ப்ளாப் ஆகின. இதனால் உடனடியாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஷால் இருக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய நண்பர்களான நந்தா- ராணா ஆகியோர் தயாரிப்பில் ‘லத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் பேன் இந்தியா திரைப்படமாக ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிகக்ப்பட்டு இருந்த நிலையில் இப்போது ரிலீஸ் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிச்செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பில் விஷாலுக்கு ஏற்பட்ட காயத்தால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே செப்டம்பர் 15 ஆம் தேதி வெந்து தணிந்தது காடு மற்றும் ஜெயம் ரவியின் அகிலன் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆக உள்ளன என்பது குறிப்பிடத்தகக்து.