சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவிற்கு பதில் இவரா? ரஜினிக்கு பதில் இவரா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

0
141
Chandramuki2
Chandramuki2

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை  பி.வாசு இயக்கி, ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் வசூலையும் தட்டிச்சென்றது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Raghava Lawrence to star in 'Chandramukhi 2' - Entertainment

சந்திரமுகி2 வில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்திருந்த ஜோதிகா 2-ம் பாகத்திலும் இடம்பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் இந்தப் படத்தில் நடிக்க தன்னை யாரும் கேட்கவில்லை என்று பேட்டி ஒன்றில்  கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜோதிகாவிற்கு பதிலாக சிம்ரன் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில் சிம்ரன் இதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம்  பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Kiara Advani says she never looked at Kabir Singh as a hero in any ...

கியாரா அத்வானி ஏற்கனவே காஞ்சனா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த  “லட்சுமி பாம்” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தை பார்த்த பின்புதான், சந்திரமுகி2 விற்கு கியாரா அத்வானியை தேர்வு செய்து இருக்கிறார்களோ என்னமோ?

Previous articleபிரான்ஸ்லிருந்து புறப்பட்ட ரஃபேல் விமானம் : இந்தியாவை வந்தடையும் நாள்?
Next articleஅப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு மண்பானை மண்சட்டி வழங்கப்பட்டது