பிரான்ஸ்லிருந்து புறப்பட்ட ரஃபேல் விமானம் : இந்தியாவை வந்தடையும் நாள்?

0
70

இந்தியா பிரான்ஸ் மேற்கண்ட ஒப்பந்தத்தின்படி தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானம்  தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்க தொடங்கியுள்ளது.

2014ஆம் ஆண்டு இந்தியா பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் விமானங்கள் வாங்க இந்திய அரசு முடிவு செய்தது. அருண் ஜெட்லி பாதுகாப்பு படை அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டு  பிரதமர் நரேந்திர மோடி ஒப்பந்தில் கையெழுத்திட்டார். இந்த விமானத்தின் விலை அதிகமாகவும், இதனால் பல ஊழல் நடந்திருப்பதாக பல தரப்பு வாதம் எழுந்துள்ள நிலையில்  இருந்தன. இதற்கான சர்ச்சையும் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி பாதுகாப்பு படையை மேலும் வலுப்படுத்த விமானம் வாங்க அரசு முடிவு செய்தது.

ரஃபேல் விமானங்கள் கடந்த மே மாதமே இந்தியாவிற்கு ஒப்படைக்கும் நிலையில் கொரோனாவால் தாமதமாக ஒப்படைக்கப்படுகிறது.தற்பொழுது ரபேல் விமானம் 5 பிரான்சில் இருந்து புறப்பட்டு இந்தியா ஹரியானாவில் உள்ள ஆம்பாலா விமானப்படை தளத்தில் கொண்டுவரப்படுகிறது. 29 ஆம் தேதி இந்த விமானத்தை இந்திய ராணுவ படையில்  இணைக்கப்படுகின்றது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினவிழாவில் ரஃபேல் விமானம் அணிவகுப்பு இடம்பெறுமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்த விமானத்தை காண மக்களிடையே அர்வம் அதிகரித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

author avatar
Pavithra