இந்த பகுதிகளில் மின்சார சேவையில் மாற்றம்! சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு!

0
114
Change in electricity service in these areas! Chennai Railway Division announced!
Change in electricity service in these areas! Chennai Railway Division announced!

இந்த பகுதிகளில் மின்சார சேவையில் மாற்றம்! சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை ரயில்வே கோட்டம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில். பட்டாபிராம் பணிமையில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. அதனால் இன்று இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் பட்டாபிரம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வண்டி எண் 43892 இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேளச்சேரி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இன்று இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வண்டி எண் 43799 முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் இதற்கு பதிலாக வேளச்சேரி ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு பயணிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்ட்ரல் திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வண்டி எண் 43255 இன்று முழுவதுமாக ரத்து செய்யபடுகிறது.இதற்கு பதிலாக சென்ட்ரல் திருவள்ளூர் இடையே இரவு 11.50 மணிக்கு சிறப்பு பணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.சென்ட்ரல் ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலான வண்டி எண் 66007 இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக சென்ட்ரல் ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கபடவுள்ளனர் என அறிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K