காலையில் எழுந்தவுடன் ஒரே சோர்வாக உள்ளதா? சுறுசுறுப்பாக இருக்க எளிய வழிகள்! 

0
178

காலையில் எழுந்தவுடன் ஒரே சோர்வாக உள்ளதா? சுறுசுறுப்பாக இருக்க எளிய வழிகள்! 

நிறைய பேருக்கு காலை எழுந்தவுடன் மிகவும் சோம்பலாக இருக்கும். படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மனசு இருக்காது. கை கால் எல்லாம் வழியாக இருக்கும்.ஒருவித சோர்வாகவே இருப்பார்கள். இன்னும் கொஞ்ச நேரம் படுக்க வேண்டும் போல தோன்றும். ஒருவித மந்த நிலையினுடையே  இருப்பார்கள்.

இதனால் அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுகிறது என்றால் அவர்கள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அதாவது வைட்டமின் பி12, டி சத்துக்கள் குறைவாக இருப்பது, உடலில் ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைவாக இருப்பது போன்ற காரணங்களினால் இந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதை சரி செய்ய எளிய வழிமுறைகளை பார்ப்போம்.

1. இரவு படுக்க போவதற்கு முன்பு சூடான நீரை டீ குடிப்பது போல் குளித்துவிட்டு படுக்க வேண்டும்.

2. வாரத்திற்கு ஒரு முறை விளக்கெண்ணையை பாலிலோ அல்லது சுடுநீரிலோ கலந்து குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் வாதத்தை விரட்டும். உடல் சுத்தமாகும். இதனால் நமக்கு கிடைக்கும் ஆக்சிஜன் அளவும் அதிகமாகும்.

3. முளைகட்டிய பயிறு வகைகள், மற்றும் நீர் காய் வகைகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். பீர்க்கங்காய், கோவக்காய், சுரைக்காய், போன்ற காய்களை பருப்பு சேர்த்து கூட்டாக சமைக்காமல் அவித்து பொறியலாக செய்து சாப்பிட வேண்டும். இதனால் அதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற தன்மை நமக்கு முழுதாக கிடைக்கும். அதேபோல் முளைகட்டிய பயிர் வகைகளை காலை வேளைகளில் எடுத்துக் கொண்டு வர வேண்டும்.

4. காலை உணவு எளிய உணவாக இருக்க வேண்டும். முளைக்கட்டிய பயிர் வகைகள், கம்பு, சோளம்,ராகி, இவைகளினால் தயாரிக்கப்பட்ட கஞ்சி வகைகள் உடலுக்கு ஆக்சிஜனேற்ற தன்மையை அதிகரித்துக் கொடுக்கும்.

5. வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். நல்லெண்ணெய் லேசாக சூடாக்கி தலை உடல் முழுவதும் தடவி 15 நிமிடம் கழித்து சூடு நீரில் குளித்து வர உடல் சோர்வு முற்றிலும் நீங்கும்.

மேற்கண்ட முறைகளை அடிக்கடிக்கு பயன்படுத்தி வர நமது உடல் சோம்பலிலிருந்து மீண்டு சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக மாறும்.