இரயில் போக்குவரத்தில் இன்றும் நாளையும் மாற்றம்!!!

Photo of author

By CineDesk

இரயில் போக்குவரத்தில் இன்றும் நாளையும் மாற்றம்!!!

CineDesk

இரயில் போக்குவரத்தில் இன்றும் நாளையும் மாற்றம்!!!

நெல்லை மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிக்காக இவ்விரு நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து இன்றும் நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதுகாப்பு பணிகளுக்காக  மாற்றம் செய்யப்பட்ட ரயில் பாதைகள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை-செங்கோட்டை ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் (06687) ஆகியவை நெல்லை-செங்கோட்டை (06684) சேரன்மாதேவி நெல்லை இடையே இன்றும் நாளையும் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி ரயில் (22628) திருவனந்தபுரத்திலிருந்து 40 நிமிடங்கள் தாமதமாக நண்பகல் 12:15க்கு புறப்பட தயாராகும்.

இவ்வாறு செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை போன்ற இரண்டு நாட்களில் பாலக்காடு-திருச்செந்தூர் ரயில்(167 31) மற்றும் திருச்செந்தூரில்- பாலக்காடு ரயில் (16732) ஆகியன போன்றவை கோவில்பட்டி-திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு  தெற்கு ரயில்வே அலுவலகம் வெளியிட்ட குறிப்பில் தெரியவருகிறது.