பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. கூடுதல் விடுமுறை?? மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

Photo of author

By Rupa

பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. கூடுதல் விடுமுறை?? மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

Rupa

Happy news for school students!! Holidays again for schools and colleges !!

பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. கூடுதல் விடுமுறை?? மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியுடன் பொது தேர்வு அனைத்தும் முடிவடைந்தது.இதனையொட்டி ஒரு மாத காலம் கோடை விடுமுறையும் அளித்தனர்.இந்த விடுமுறையின் இடைப்பட்ட காலத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.அதேபோல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது.கடந்தாண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் வரும் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதேபோல போக்குவரத்து துறையும் மாணவர்கள் புதிய பஸ் பாஸ் பெறும் வரை பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.மேற்கொண்டு பழைய பஸ் பாஸ் இல்லாத மாணவர்கள் தங்களது ஐடி கார்டு காமித்தும் பயணிக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது தள்ளிப் போடப்படும் என்று பலரும் கூறி வருகின்றனர்.அதாவது ஜூன் 6-ம் தேதி வியாழக்கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்பட்டால் மேற்கொண்டு ஒரு நாள் மட்டும்தான் மாணவர்கள் வரக்கூடும்.இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது.இதனை தவிர்த்து பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி தொடங்கப்பட்டால் மாணவர்கள் தொடர்ச்சியாக வருவர் என பலரும் கூறி வருகின்றனர்.இந்த காரணத்தினால்  பள்ளி திறப்பு தேதியை மாற்றம் செய்யும்படி கோரிக்கை எழுந்து வருகிறது.