பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

0
176
Change in school opening hours! Important information released by the government!
Change in school opening hours! Important information released by the government!

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

உத்தரப் பிரதேசத்தில் அடிப்படைக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு நேற்று அனுப்பப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவில் உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகின்றது.அதனால் மாணவர்களின் நலன் கருதி ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு லக்னோவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் வரும் ஜனவரி பத்தாம் தேதி வரை இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என உத்தரவிட்டுள்ளனர்.சீதாபூரில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் நான்காம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து வாட்ஸ் அப் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் கோரக்பூரில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து பஞ்சாப், ஹரியானா, சண்டிகார், டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட, மாநிலங்களில் வியாழக்கிழமை வரை கடும் பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் இமயமலையில் இருந்து வடமேற்கு காற்று வீசுவதால் அடுத்த இரண்டு நாட்களில் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய இந்தியாவில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் குறையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleநேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மீண்டும் அமலுக்கு வந்த திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
Next articleஉச்சத்தில் முட்டை விலை! தேவை அதிகரிப்பால் மேலும் உயர்த்திய என்சிசி!