நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மீண்டும் அமலுக்கு வந்த திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

0
177
The program is back in effect at all ration shops from yesterday! Information released by the central government!
The program is back in effect at all ration shops from yesterday! Information released by the central government!

நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மீண்டும் அமலுக்கு வந்த திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.இந்த திட்டத்தின் மூலமாக ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷன் கடையில் தலா ஐந்து கிலோ கோதுமை அல்லது அரசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த திட்டத்தை டிசம்பர் 31 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற இலவச உணவு தானிய திட்டத்தை அடுத்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன் மூலம் முன்னதாக அறிவிக்கப்பட்ட நீடிப்பு நேற்று முன்தினம்  முடிவடைந்தது.நேற்று  முதல் புதிய நீட்டிப்பு அமல் படுத்தப்பட்டது.மேலும் இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சக அதிகாரிகள் கூறுகையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி அரிசி, கோதுமை தானியங்கள் தகுதியான பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது.

ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 ,2023 வரை இந்த திட்டம் அமலில்  இருக்கும் இலவச உணவு தானிய திட்டத்தை முறையாக செயல்படுத்த 18 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இலவச உணவு தானியத் திட்டம் நேற்று முதல் அனைத்து நியாவிலைக் கடைகளில் கிடைக்கும்.இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ 2 லட்சம் கோடி செலவிடும் என கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K