மாநில பதவியில் மாற்றம்.. அண்ணாமலைக்கு வரும் நெருக்கடி!! திடீரென்று டெல்லிக்கு பறந்த தமிழிசை!!
இந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.இந்நிலையில் கடந்த முறை மக்களவைத் தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்ற இடங்களில் இம்முறை ஒரு எம்பி கூட வர முடியாத சூழல் நிலவியுள்ளது.கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக உடனான கூட்டணியில் ஒரு இடத்தை யாவது பிடித்தது.ஆனால் இம்முறை கூட்டணி முறிந்த நிலையில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு செல்லப்பட்டதுடன் ஒரு எம்பி கூட தேர்வாக முடியவில்லை.
இது குறித்து அதிமுக,பாஜக என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என்றும் விமர்சனம் செய்தனர்.அந்த வகையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள அண்ணாமலை விரும்பவில்லை அப்படி கூட்டணி வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் என பகிரங்க கருத்தையும் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவளித்து திருச்சி சூர்யா உள்ளிட்டோர் தமிழிசையை வசைப்பாடி வந்தனர்.
இதனால் இவர் பாஜக கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழிசையை மத்திய மந்திரி அமித்ஷா அழைத்து எச்சரிக்கை விடுத்த வீடியோவும் அதிகளவு வைரலானது.இது குறித்து தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய பொழுது, அவர் என்னை எதுவும் எச்சரிக்கவில்லை என பதிலளிக்க முடியாமல் அதனை தட்டிக்கழித்தார்.
இதன் பேச்சு முடிவதற்குள்ளேயே அண்ணாமலை திடீரென்று தமிழிசை வீட்டிற்கு சென்று சமாதானம் பேசி வந்தார்.இது அனைத்தும் கட்சிக்குள் பரபரப்பாக பேசப்பட்டது.இந்த பேச்சுவார்த்தையால் அண்ணாமலை மற்றும் தமிழிசைக்கு இடையேயான வார்த்தை போரானது முடிவுக்கு வந்தது.இந்த நிலையில் திடீரென்று தமிழிசை சௌந்தர்ராஜன் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளார்.
இதில் தமிழக பாஜக மாநில தலைவர் பதவி மாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.மேலும் பாஜக தனிபெருமான்மையுடன் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என்பதை உணர்ந்து அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.