அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!!
அரையாண்டுத் தேர்வுக்கு ஆன்லைன் வினாத்தாள் நடைமுறையை
பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரையாண்டுத்தேர்வு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல்
தொடங்கி நடைபெற்று வருகின்றது. வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி
தேர்வுகள் முடிவடைகிறது.
இந்நிலையில் அரையாண்டுத்தேர்வு விடுமுறை எப்போது எத்தனை நாள் என்ற கேள்விகள் எழுந்தது.அதற்கு பதில் அளித்த கல்வித்துறை தேர்வு
விடுமுறைகள் டிசம்பர் 25 ஆம் தேதி கிருஸ்துமஸ் அன்று தொடங்கி
அடுத்த ஆண்டு ஜனவரி1 ஆம் தேதி வரை விடுமுறை, மீண்டும்
பள்ளித்திறப்பு ஜனவரி 2 ஆம் தேதி எனவும் அறிவித்தனர்.
6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 15-12-2022 அன்று தொடங்கி 24-12-
2022 அன்று முடிவடைகிறது. 6, 8, 10, மற்றும் 12 வகுப்புகளுக்கு
காலை நேரத்திலும் 7, 9, 11, வகுப்புகளுக்கு பிற்பகல் தேர்வுகள்
நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வினாத்தாள் வழங்கும்
நடைமுறையில் புதிய திட்டம் ஒன்றினை கொண்டு வந்துள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் 232 நடுநிலைப்பள்ளிகள் 83 ,
உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 113, மேல்நிலைப்பள்ளிகள் என
428 பள்ளிகளில் படிக்கும் 6 முதல் பிளஸ் 2 வரையிலான
மாணவ,மாணவிகளுக்கு முதன் முறையாக ஆன்லைன் மூலம் வினாத்தாள் அனுப்பப்பட்டு அரையாண்டுத்தேர்வுநடைபெற்று வருகின்றது.
பள்ளிக்கல்விதுறையின் இந்த சோதனைத் திட்டம் வெற்றி பெற்றால் இனி மற்ற
மாவட்டங்களுக்கும் ஆன்லைன் வழி வினாத்தாளை அடுத்த
தேர்வில் இருந்து நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.