இந்த முதுநிலை தேர்வுக்களுக்கான வழிமுறையில் மாற்றம்! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

இந்த முதுநிலை தேர்வுக்களுக்கான வழிமுறையில் மாற்றம்! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்,தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ,எம்சிஏ படிப்புகளில் சேர வேண்டும் என்றால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் அதாவது டான்செட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் வருடம் தோறும் நடத்தி வருகின்றது.அந்த வகையில் நடப்பாண்டிற்கான டான்செட் தேர்வு வரும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

25 ஆம் தேதி காலை எம்சிஏ படிப்பிற்கும்,மதியம் எம்பிஏ படிப்பிற்கும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் எம்இ, எம்பிளான், எம் ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும் கடந்த ஆண்டுகளில் டான்செட் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.அதன் மூலமாக தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.ஆனால் நடப்பாண்டில் எம்இ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்காக புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று முதல் தொடங்கியது.தேர்வெழுத விரும்பும் பட்டதாரிகள் www.tancet.annauniv.edu என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.அதுமட்டுமின்றி விண்ணப்பிக்கும் வழிமுறைகள்,தேர்வுக் கட்டணம்,ஹால் டிக்கெட் வெளியீடு போன்ற கூடுதல் விவரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.